ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் அரை இறுதியில் ஸ்ரீகாந்த்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் கால் இறுதி ஆட்டத்தில் சாய் பிரணித்தை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்குள் நுழைந்தார் ஸ்ரீகாந்த்
சிட்னி,
ஆஸ்திரேலியா ஓபன் பெட்மிண்டன் கடந்த 20ம் தேதி சிட்னியின் தொடங்கியது. இந்த தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணித்தும் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும் மோதினர்.
ஸ்ரீகாந்த் கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேஷிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். அதற்கு முன்னதாக ஏப்ரலில் நடைபெற்ற சிங்கபூர் ஓபன் தொடரின் இறுதி போட்டியில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி பிரணித் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில் இன்று நடைபெரும் போட்டியால் வெல்லபோவது யார் என்று அனைவரும் பெரும் எதிர்பார்போடு இருந்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் தொடக்கத்தில் பிரணித் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் பின்னர் சுதாரித்து கொண்டு விளையாடிய ஸ்ரீகாந்த் முன்னிலை பெற்றார். இருவரும் கடினமாக போராடினர். இறுதியி ஸ்ரீகாந்த் 25-23 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று முன்னிலை அடைந்தார்.
இரண்டாவது சுற்று முழுவதும் ஸ்ரீகாந்த் தனது திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அவர் 21-17 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற இருக்கும் மற்ற காலிறுதி ஆட்டங்களில் சிந்துவும் சீன தய்பேயின் தை சூ யிங்கும், சாய்னா நெஹ்வாலும் சீனாவின் சன் யூவும் மோத உள்ளனர்.
Related Tags :
Next Story