பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு


பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2017 9:26 AM GMT (Updated: 3 Aug 2017 9:26 AM GMT)

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  அவருடன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர், இந்திய கிரிக்கெட் வீரர் செத்தேஸ்வர் புஜாரா,  பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வருண் பாட்டி, கோல்ப் விளையாட்டு வீரர் சவாரிஸியா உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஹாரியா, முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

Next Story