உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளிப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து பிரதமர் மோடி ஜனாதிபதி வாழ்த்து


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளிப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து பிரதமர் மோடி ஜனாதிபதி வாழ்த்து
x

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனையிடம் இந்தியாவின் பி.வி.சிந்து போராடி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

கிளாஸ்கோ,

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் அரையிறுதி சுற்று போட்டி ஒன்றில் 2016ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் சீனாவின் சென் யூபெய் விளையாடினர்.

இந்த போட்டியில், 21-13, 21-10 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தி சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பானின் நோஜோமி ஒகுஹராவிடம் 19-21, 22-20, 20-22 செட்களில்  இந்தியாவின் பி.வி.சிந்து போராடி தோல்வி அடைந்தார்.
முடிவில், சிந்து முதன் முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றார்.  உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி சிந்து பெற்றார்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி  டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story