ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், பிரணாய் கால் இறுதிக்கு முன்னேற்றம்


ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்:  ஸ்ரீகாந்த், பிரணாய் கால் இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 21 Sep 2017 4:39 PM GMT (Updated: 21 Sep 2017 4:38 PM GMT)

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிதம்பி ஸ்ரீகாந்த் மற்றும் எச்.எஸ். பிரணாய் ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக தர வரிசையில் 8வது இடம் வகிக்கும் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் ஹூ யுன்னை 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி அரை மணிநேரத்தில் முடிந்தது.

இதேபோன்று மற்றொரு போட்டியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான இந்தியாவின் பிரணாய், சீன தைபே வீரரான சூ ஜென் ஹாவோவை 21-16, 23-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்தியாவின் சாய்னா நேவால் 16-21, 13-21 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக்கின் சாம்பியனான ஸ்பெயின் நாட்டின் கரோலீனா மெரீனிடம் தோற்று வெளியேறினார்.


Next Story