13-வது வயதில் டாக்டரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் -முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை


13-வது வயதில் டாக்டரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன் -முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை
x
தினத்தந்தி 19 Oct 2017 5:28 AM GMT (Updated: 19 Oct 2017 5:28 AM GMT)

தனது 13 வது வயட்தில் அணியின் டாக்டரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யபட்டதாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மெகய்லா மரோனி கூறி உள்ளார்.

2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற  அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மெகய்லா மரோனி,  தான் தனது 13-வது வயதில் அணியின் டாக்டர்  லாரி நசாரால் பாலியல் கொடுமை செய்யப்பட்டதாக கூறி உள்ளார். தற்போது 21 வயதாகும் மரோனி தான்  நசாரால் ஏழு ஆண்டு காலமாக பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறி உள்ளார்.

நசார்  பல கிரிமினல் பாலியல் நடத்தை குற்றச்சாட்டுக்களுக்காக மிச்சிகன்  சிறையில் உள்ளார் . முன்னதாக இந்த ஆண்டு குழந்தை பாலியல் படங்களை வைத்திருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.

மரோனி கூறும்  போது ”டெக்சாஸ் தேசிய அணி பயிற்சி முகாமில்  தேவையற்ற மற்றும் வெறுக்கத்தக்க" துஷ்பிரயோகம் தொடங்கியது." ”நான் விளையாடியது வரை, இது முடிவுக்கு வரவில்லை”

 ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைனுக்கு எதிராக தனித்தனி குற்றச்சாட்டுகளை பலரும் கொடுத்ததால் புதனன்று தனது குற்றசாட்டை தயக்கமின்றி மரோனி கூறினார். லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டியில்  மரோனி ஜிம்னாஸ்டிக்ஸ் குழு விளையாட்டில் தங்கம் வென்றார். தனியாக வெள்ளி பதக்கம் பெற்று உள்ளார். 

Next Story