சீன ஓபன் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பொன்னப்பா மற்றும் ராங்கிரெட்டி இணை முன்னேற்றம்


சீன ஓபன் பேட்மிண்டன்:  கலப்பு இரட்டையர் பிரிவில் பொன்னப்பா மற்றும் ராங்கிரெட்டி இணை முன்னேற்றம்
x
தினத்தந்தி 14 Nov 2017 6:55 PM IST (Updated: 14 Nov 2017 6:55 PM IST)
t-max-icont-min-icon

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பொன்னப்பா மற்றும் ராங்கிரெட்டி இணை முக்கிய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

பஜவ்,

சீனாவில் சீன ஓபன் பேட்மிண்டன் சூப்பர்சீரிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா மற்றும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி இணை சீன தைபேயை சேர்ந்த லீ ஜீ-ஹூவெய் மற்றும் வூ டி ஜங் இணையை எதிர்த்து விளையாடியது.

இந்த போட்டியில் 24-22, 21-7 என்ற செட் கணக்கில் சீன தைபே இணையை இந்திய இணை வீழ்த்தியது.

இதனை தொடர்ந்து நாளை நடைபெறும் முதல் சுற்று போட்டியில் டென்மார்க்கின் மேத்தியாஸ் கிறிஸ்டியன்சென் மற்றும் கிறிஸ்டினா பெடர்சன் இணையை எதிர்த்து இந்திய இணை விளையாடுகிறது.

1 More update

Next Story