ஹாங்காங் ஓபன் அரையிறுதி போட்டியில் பி.வி.சிந்து வெற்றி

ஹாங்காங் ஓபன் அரையிறுதி போட்டியில் பி.வி. சிந்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கெவ்லோன்,
ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 2–ம் நிலை வீராங்கனையான அகானே யமாகுச்சியுடன் (ஜப்பான்) மோதினார். 37 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21–12, 21–19 என்ற நேர்செட்டில் அகானே யமாகுச்சியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரைஇறுதியில் பி.வி.சிந்து, 6–ம் நிலை வீராங்கனை ராட்சனோக் இன்டனோனை (தாய்லாந்து) எதிர்கொண்டார். அபாரமான ஆட்டத்தால் 21-17, 21-17 என நேர்செட் கணக்கில் ரட்சனோக் இன்டனோனை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் தாய்வான் வீராங்கனை டாய் சூ ஹிங் எதிர்கொள்கிறார்.
Related Tags :
Next Story