புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு பி.வி.சிந்து ரூ.25 லட்சம் நன்கொடை


புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு பி.வி.சிந்து ரூ.25 லட்சம் நன்கொடை
x
தினத்தந்தி 12 Jan 2018 7:30 PM GMT (Updated: 12 Jan 2018 5:49 PM GMT)

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து சோனி டெலிவி‌ஷனில் அமிதாப்பச்சன் நடத்திய குரோர்பதி வினாடி வினா நிகழ்ச்சியில் ரூ.25 லட்சம் வெற்றி பெற்றார்.

ஐதராபாத், 

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து சோனி டெலிவி‌ஷனில் அமிதாப்பச்சன் நடத்திய குரோர்பதி வினாடி வினா நிகழ்ச்சியில் ரூ.25 லட்சம் வெற்றி பெற்றார். அந்த தொகையை ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் பசவட்டராகம் இந்திய அமெரிக்கன் புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. ‘வினாடி வினா நிகழ்ச்சியின் போது அமிதாப்பச்சன் கேள்வி கேட்கையில் இதில் வரும் பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன்’ என்று விழாவில் பேசுகையில் சிந்து தெரிவித்தார். 

Next Story