தென்கொரிய ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டியில் தங்கம் வென்ற நார்வே வீரர்


தென்கொரிய ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டியில் தங்கம் வென்ற நார்வே வீரர்
x
தினத்தந்தி 18 Feb 2018 8:29 AM GMT (Updated: 18 Feb 2018 8:29 AM GMT)

தென்கொரிய குளிர்கால ஒலிம்பிக்கில் பனிச்சறுக்கு போட்டியில் நார்வே வீரர் தங்கம் வென்றார். #Tamilnews

பியாங்சங்,

தென்கொரியா நாட்டில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் பியாங்சங் நகரில் இன்று நடந்த பனிச்சறுக்கு போட்டியின் கிராஸ் கன்ட்ரி பிரிவில் நார்வே நாட்டின் வீரரான கிளேபோ தங்கம் வென்றுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த டெனிஸ் ஸ்பிட்சோவ் மற்றும் கிளேபோ ஆகிய இருவரும் போட்டியில் ஒருவரை ஒருவர் முந்தி சென்று கொண்டு இருந்தனர்.  இறுதி சுற்றில் நார்வே வீரர் முதலிடத்தில் வந்து தங்க பதக்கத்தினை வென்றார்.

ரஷ்ய வீரர் 9.4 வினாடிகள் பின்தங்கி 2வது இடத்தினை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.  பிரான்சுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. 


Next Story