காமன்வெல்த் போட்டி பளுதூக்கும் போட்டி இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்

காமன்வெல்த் போட்டியில் மகளிர் பளுதூக்கும் போட்டி 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். #CWG18
சிட்னி
உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் அனுப்பப்பட்டுள்ளனர்.
போட்டியின் சிறப்பு அம்சமாக 71 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் மங்கை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியுடன் கம்பீரமாக அணிவகுத்து வந்தார். இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மகளிர் பளுதூக்கும் போட்டி 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். இந்த போட்டியில் காமன்வெல்த் அளவில் 6 புதிய சாதனைகளை படைத்து மீராபாய் சானு சாதனை படைத்து உள்ளார்.
Related Tags :
Next Story