காமன்வெல்த் 2018: ஆடவர் 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெண்கலம்


காமன்வெல்த் 2018: ஆடவர் 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெண்கலம்
x
தினத்தந்தி 6 April 2018 7:05 AM GMT (Updated: 6 April 2018 7:05 AM GMT)

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியின் ஆடவர் 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது. #CommonwealthGames2018

கோல்டுகோஸ்ட், 

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது. 

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்,  வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் அனுப்பப்பட்டுள்ளனர். 

இதில் நேற்று நடைபெற்ற பளுதூக்கும் எடைப்பிரிவு போட்டிகளில் இந்தியாவின் மீராபாய் சானு தங்க பதக்கமும், குருராஜா வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.  இன்று நடைபெற்ற போட்டியில்,  மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்று அசத்தினார். 

இந்த நிலையில், ஆடவருக்கான 69 கிலோ எடைப்பிரிவுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் தீபக் லோதர் வெண்கல பதக்கம் வென்றார். ஆஸ்திரேலிய காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை பெற்றுள்ளது. 

Next Story