காமன்வெல்த் விளையாட்டு: மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது


காமன்வெல்த் விளையாட்டு: மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது
x
தினத்தந்தி 8 April 2018 12:21 PM GMT (Updated: 2018-04-08T17:51:30+05:30)

காமன்வெல்த் விளையாட்டு மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. #CommonwealthGames2018

கோல்டுகோஸ்ட்,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில்  மாணிக்கா பத்ரா, மாதுரிகா பட்கர் மற்றும் மௌமா தாஸ் ஆகிய வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது.
 காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கங்களை வென்று 4ஆம் இடத்தில் உள்ளது. 


Next Story