காமன்வெல்த் டபுள் டிராப் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அங்கூர் மிட்டல் வெண்கலம் வென்றார்


காமன்வெல்த் டபுள் டிராப் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அங்கூர் மிட்டல் வெண்கலம் வென்றார்
x
தினத்தந்தி 11 April 2018 12:52 PM IST (Updated: 11 April 2018 12:52 PM IST)
t-max-icont-min-icon

காமன்வெல்த் போட்டியில் ஆடவர் டபுள் டிராப் துப்பாக்கி சுடுதலில் அங்கூர் மிட்டல் இன்று வெண்கலம் வென்றார். #CWG2018

பிரிஸ்பேன்,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் டபுள் டிராப் துப்பாக்கி சுடுதலில் அங்கூர் மிட்டல் இன்று வெண்கலம் வென்றார்.

இந்தியாவின் முகமது ஆசாப் என்ற மற்றொரு வீரர் 4வது இடத்தினை பிடித்துள்ளார்.  இவர் 4 வருடங்களுக்கு முன் கிளாஸ்கோ நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர்.

இந்த போட்டியில் ஸ்காட்லாந்தின் டேவிட் மேக்மேத் 74 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து தங்க பதக்கத்தினையும், ஐசில் ஆப் மேன் நாட்டின் டிம் நீயல் 70 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தினையும் வென்றுள்ளனர்.

கடந்த வருடம் மாஸ்கோ நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அங்கூர் மிட்டல் வெள்ளி பதக்கம் வென்றார்.  இதேபோன்று சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டிகளிலும் அவர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.
1 More update

Next Story