காமன்வெல்த் போட்டி மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை பபிதா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்


காமன்வெல்த் போட்டி மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை பபிதா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 12 April 2018 7:49 AM GMT (Updated: 2018-04-12T13:19:21+05:30)

காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தத்தில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பபிதா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார். #CWG2018

கோல்டு கோஸ்ட்,

21வது காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது.

இதில், மல்யுத்த போட்டியின் மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை பபிதா குமாரி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

கனடாவின் வீராங்கனையான டயானா வெய்கர் 2-5 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியனான பபிதா குமாரியை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இதற்கு முன் நடந்த மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை தேஜஸ்வினி சாவந்த் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோன்று சுஷில் குமார், ராகுல் அவாரே, கிரண் ஆகியோர் இந்தியாவிற்கான பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.


Next Story