காமன்வெல்த் 2018: மகளிர் வட்டு எறிதல் பிரிவுகளில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்


காமன்வெல்த் 2018: மகளிர் வட்டு எறிதல் பிரிவுகளில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்
x
தினத்தந்தி 12 April 2018 12:06 PM GMT (Updated: 12 April 2018 12:06 PM GMT)

காமன்வெல்த் போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில், மகளிர் வட்டு எறிதல் பிரிவுகளில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. #CommonwealthGames2018

கோல்டு கோஸ்ட், 

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில், 2018 ஆம் ஆண்டு  காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில், தொடர்ந்து பதக்க வேட்டை நடத்தி வரும் இந்தியா , பதக்க பட்டியலில் தற்போது வரை, 14 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில்  உள்ளது. 

இன்று மகளிருக்கான வட்டு எறிதல் பிரிவில், இந்தியாவின் சீமா புனிமா மற்றும் நவ்ஜீத் தில்லோன் ஆகியோர் முறையே வெள்ளி , வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். 


Next Story