காமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. #CommonwealthGames2018
கோல்டு கோஸ்ட்,
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் 10-வது நாளான இன்றும் இந்திய அணியினரின் பதக்க அறுவடை தொடர்ந்து வருகிறது.
* காமன்வெல்த் போட்டியின் மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் தங்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மணீஷ் கவுசிக் வெள்ளி பதக்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை 46-49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் வெள்ளி பதக்கம் வென்றார்.
* ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ஸ்மித் தங்கம் வென்றுள்ளார்.
* மகளிர் 50 கிலோ பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் வினிஷ் போகத் தங்கம் வென்றார்.
* கலப்பு ஸ்குவாஷ் இறுதி போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல்/ சவுரவ் கோஷல் தோல்வி அடைந்தது. இதன்மூலம், வெள்ளிப்பதக்கம் பெற்றது.
* மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா ஜோடிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
* மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சிங்கப்பூரின் மெங்கயு யூ என்ற வீராங்கனையை இந்தியாவின் மனிகா பத்ரா வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.
Related Tags :
Next Story