ஆசிய விளையாட்டு போட்டி: 400 மீ ஓட்டப்பந்தயத்தில் முகமது அனாஸ், ஹிமாதாஸ் ஆகியோர் வெள்ளி வென்றனர்

ஆசிய விளையாட்டு போட்டியின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் முகமது அனாஸ், ஹிமாதாஸ் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். #AsianGames2018
ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான இன்று தடகளத்தில் 400 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறும் இந்த ஓட்டத்தில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்க தகுதி பெற்றிருந்தனர்.
பெண்கள் பிரிவில் ஹிமாதாஸ் (அசாம்), நிர்மலா (ராஜஸ்தான்), ஆண்கள் பிரிவில் முகமது அனாஸ் யசியா (கேரளா), ஆரோக்ய ராஜ் (தமிழ்நாடு) ஆகியோர் பங்கேற்றனர்.
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கும், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் 5.40 மணிக்கு நடைபெற்றது.
இந்நிலையில் ஆசிய விளையாட்டுப்போட்டியின் மகளிர் பிரிவின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமாதாஸ் வெள்ளி பதக்கம் வென்றார்.
அதேபோல் ஆசிய விளையாட்டுப்போட்டியின் ஆடவர் பிரிவின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் முகமது அனாஸ் யசியா வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்த பதக்கங்கள் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. 74 தங்கம் உள்பட 165 பதக்கங்களுடன் தொடர்ந்து சீனா முதல் இடத்தில் உள்ளது.

Related Tags :
Next Story