ஆசிய விளையாட்டுப்போட்டிகள்: பேட்மிண்டனில் பி.வி சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆசிய விளையாட்டுப்போட்டியின் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஜகர்தா,
ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் மகளிர் அரையிறுதி போட்டியில், இந்தியாவின் பிவி சிந்து ஜப்பானின் அக்னே யமாகுச்சியை எதிர்கொண்டார். இந்த போட்டியில், 21-17,15-21, 21-10 என்ற செட் கணக்கில் பிவி சிந்து வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆசிய விளையாட்டுப்போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரங்கானை ஒருவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இதுதான் முதல் தடவையாகும். இறுதிப்போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான டை சூ யிங்- கை எதிர்கொள்ள உள்ளார்.
Related Tags :
Next Story