ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்க தொகை


ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்க தொகை
x
தினத்தந்தி 28 Aug 2018 9:17 AM GMT (Updated: 28 Aug 2018 9:17 AM GMT)

ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தருண் அய்யாச்சாமிக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்க தொகை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

சென்னை,

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் ஆண்களுக்கான தடைதாண்டும் ஓட்டப் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் தருண் அய்யாச்சாமிக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்க தொகை அறிவித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். அவருக்கு வாழ்த்து கடிதமும் அனுப்பபட்டு உள்ளது.

Next Story