பேட் மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு விரைவில் திருமணம்


பேட் மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு விரைவில் திருமணம்
x
தினத்தந்தி 26 Sep 2018 12:24 PM GMT (Updated: 26 Sep 2018 12:24 PM GMT)

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது நீண்ட நாள் காதலரான பேட்மிண்டன் வீரர் கஷ்யாப்பை திருமணம் செய்ய உள்ளார்.

புதுடெல்லி,

பாட்மிண்டன்  விளையாட்டில்  பல பதக்கங்களை பெற்றவர் சாய்னா நேவால்.  பல ஆண்டுகளாக தொடர்ந்து பாட்மிண்டன் ஆடி வரும் அவர், சக பாட்மிண்டன் விளையாட்டு வீரரான பாருபள்ளி காஷ்யப்பை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாயின.

சமீபத்தில், சாய்னா தன் சமூக வலைதள பக்கங்களில் காஷ்யப்பின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டார். 

இந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மத்துடன் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.  திருமணம் வரும் டிசம்பர் 16 என்றும், அதை தொடர்ந்து வரவேற்பு விழா டிசம்பர் 21 அன்று நடைபெறும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2005ஆம் ஆண்டு பயிற்சியாளர் கோபிசந்த்திடம் பயிற்சி பெறும் போது தான் இருவரும் முதல் முறை சந்தித்துள்ளனர். 

சாய்னாவின் திருமண செய்தியை அறிந்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

Next Story