டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு தகுதி


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 20 Oct 2018 1:46 PM GMT (Updated: 20 Oct 2018 1:46 PM GMT)

டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் சாய்னா நேவால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஓடென்ஸ்,

டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் உலக தரவரிசையில் 19வது இடம் வகிக்கும் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங்க் உடன் அரை இறுதியில் விளையாடினார்.

இந்த போட்டியில் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் கிரிகோரியாவை வீழ்த்தி சாய்னா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.  இப்போட்டி 30 நிமிடங்கள் நீடித்தது.

அவர் இறுதி போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் தாய் சூ யிங் உடன் விளையாட இருக்கிறார்.

Next Story