குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; பதக்கத்தினை உறுதி செய்த மேரி கோம்


குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; பதக்கத்தினை உறுதி செய்த மேரி கோம்
x
தினத்தந்தி 20 Nov 2018 11:14 AM GMT (Updated: 20 Nov 2018 11:14 AM GMT)

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறி பதக்கத்தினை மேரி கோம் உறுதி செய்துள்ளார்.

புதுடெல்லி,

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தின் 48 கிலோ எடை பிரிவில் இன்று நடந்த போட்டியில் இந்தியாவின் மேரி கோம் மற்றும் சீனாவின் வு யு மோதினர்.

இதில் 5-0 என்ற புள்ளி கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறினார்.  இதனால் அவர் ஏதேனும் ஒரு பதக்கத்தினை வெல்வது உறுதியாகி உள்ளது.

35 வயது நிறைந்த 3 குழந்தைகளுக்கு தாயான கோம் இந்தியாவின் மணிப்பூரை சேர்ந்தவர்.  அவர் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றுள்ளார்.  இறுதியாக 2010ம் ஆண்டில் 48 கிலோ எடை பிரிவில் அவர் தங்கம் வென்றார்.

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அயர்லாந்து நாட்டு வீராங்கனை கேட்டி டெய்லருக்கு இணையாக பதக்கங்களை குவித்திருந்த மேரி கோம் இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் அதிக பதக்கங்களை குவித்த குத்துச்சண்டை வீராங்கனை வரிசையில் உள்ளார்.

Next Story