உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து


உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று:  இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
x
தினத்தந்தி 15 Dec 2018 11:58 AM GMT (Updated: 15 Dec 2018 11:58 AM GMT)

உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறினார்.

குவாங்சோவ்,

‘டாப்-8’ வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள உலக பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேற்று நடந்த தனது கடைசி லீக்கில் அமெரிக்க வீராங்கனை ஜாங் பீவெனை எதிர்கொண்டார். 35 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-9, 21-15 என்ற நேர்செட்டில் ஜாங் பீவெனை எளிதில் தோற்கடித்தார். தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்த (ஹாட்ரிக்) பி.வி.சிந்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், அரைஇறுதி போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டானனை 21-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறினார். இறுதிப்போட்டியில் ஜப்பான்  வீராங்கனை நோசோமி ஒகுஹராவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார் பி.வி.சிந்து.

Next Story