2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாட மேரி கோம் தகுதி


2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாட மேரி கோம் தகுதி
x
தினத்தந்தி 28 Dec 2019 7:46 AM GMT (Updated: 28 Dec 2019 7:46 AM GMT)

2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாட மேரி கோம் தகுதி பெற்று உள்ளார்.

புதுடெல்லி,

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யாரை தேர்வு செய்வது என்பதை முடிவு செய்வதற்கான 2 நாள் தகுதி போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. 

இதில் 51 கிலோ உடல் எடைப் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜூனியர் உலக சாம்பியனான தெலுங்கானாவை சேர்ந்த நிகாத் ஜரீன், தேசிய சாம்பியன் ஜோதி குலியாவை தோற்கடித்தார். நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி நிகாத் ஜரீன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியனான மணிப்பூரை சேர்ந்த  மேரிகோம், ரிது கிரிவாலை வீழ்த்தினார். 

தகுதி சுற்றின் இறுதி ரவுண்டில் 36 வயதான மேரிகோம், 23 வயதான நிகாத் ஜரீனை இன்று எதிர்கொண்டார். இதில்  வெற்றி பெற்ற மேரிகோம் இந்திய அணியில் இடம் பெற்று உள்ளார்.

Next Story