காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை


காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை
x
தினத்தந்தி 28 Dec 2019 8:16 AM GMT (Updated: 28 Dec 2019 8:16 AM GMT)

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சீமாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை சீமா எடுத்துக் கொண்டது ஊக்கமருந்து சோதனையின் ஆய்வில் தெரியவந்ததையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

விசாகப்பட்டிணத்தில் நடந்த 34-வது மகளிருக்கான தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சீமாவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து அவரின் மாதிரியில் இருப்பது தெரியவந்தது. இது ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியது மட்டுமல்லாமல், ஏமாற்றியதும் தெளிவாகத் தெரிந்தது.

சீமாவுக்கு எடுக்கப்பட்ட மாதிரிச் சோதனையில் அவரின் மாதிரியில் தடைச் செய்யப்பட்ட ஹைட்ராக்ஸ்-4-மெத்தாக்ஸ், டெமோக்சிபென், மெடினோலோன், ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மருந்துகள் அனைத்தும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு தடை செய்தவை ஆகும்.

இதையடுத்து பளுதூக்கும் வீராங்கனை சீமாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story