குத்துச்சண்டை தகுதி சுற்று போட்டியில் நிகாத் ஜரீனை வீழ்த்தினார், மேரிகோம்: கைகுலுக்க மறுத்ததால் சலசலப்பு

குத்துச்சண்டை தகுதி சுற்று போட்டியில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம், நிகாத் ஜரீனை வீழ்த்தினார். ஆனால் அவருடன் கைகுலுக்கிக் கொள்ள மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி,
ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.
இதில் 51 கிலோ உடல் எடைப்பிரிவு தான் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இந்த பிரிவின் இறுதி சுற்றில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஜூனியர் முன்னாள் உலக சாம்பியனான நிகாத் ஜரீனை நேற்று சந்தித்தார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த நிகாத் ஜரீன், மேரிகோமை அடிக்கடி வம்புக்கு இழுத்தவர் ஆவார். ‘பெரிய சாதனையாளர் என்பதால் மேரிகோமுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது, அவரையும் தகுதி போட்டி நடத்தியே அணிக்கு தேர்வு செய்ய வேண்டும். அனைத்து போட்டியாளர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும். அவரை என்னுடன் மோத வைக்க வேண்டும்’ என்று வெளிப்படையாக கூறியதுடன், மத்திய விளையாட்டுத்துறைக்கும் கடிதம் எழுதினார்.

மேலும் மேரிகோம், ‘நிகாத் ஜரீனுடன் நான் ஏன் கைகுலுக்க வேண்டும்? அவர் மற்றவர்கள் தனக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் அவர் மற்றவர்களை மதிக்க வேண்டும். இது போன்ற மனநிலை கொண்டவர்களை நான் விரும்புவதில்லை. உங்கள் கருத்துகளை களத்தில் நிரூபிக்க வேண்டுமே தவிர, வெளியில் அல்ல’ என்று காட்டமாக கூறினார்.
நிகாத் ஜரீன் கூறுகையில், ‘களத்தில் மேரிகோம் நடந்து கொண்ட விதம் எனக்கு வேதனை அளிக்கிறது. குத்துச்சண்டை வளையத்துக்குள் அநாகரிகமான வார்த்தைகளை பேசினார். நான் ஜூனியர் வீராங்கனை. போட்டி முடிந்ததும் பரஸ்பரமாக கட்டித்தழுவி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு அவர் முன்வரவில்லை. இதற்கு மேல் இந்த விஷயத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை’ என்றார்.
முன்னதாக 23 வயதான நிகாத் ஜரீனுக்கு ஆதரவாக வந்திருந்த தெலுங்கானா குத்துச்சண்டை சங்கத்தை சேர்ந்த சில பிரதிநிதிகள் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அவர்களை கட்டுப்படுத்திய இந்திய குத்துச்சண்டை சங்க தலைவர் அஜய் சிங், ‘இந்த மாதிரி எல்லாம் நடந்து கொண்டால் குத்துச்சண்டை எப்படி வளரும்’ என்றார்.
சாக்ஷி சவுத்ரி (57 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்று ஒலிம்பிக் தகுதி போட்டிக்கு தேர்வானார்கள்.
முன்னாள் உலக சாம்பியனான எல்.சரிதாதேவி, 60 கிலோ பிரிவில் தேசிய சாம்பியன் சிம்ரன்ஜித் கவுரிடம் பணிந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில் இருவரும் கோதாவில் இறங்கியதால் மைதானத்தில் ஒருவித பரபரப்பு நிலவியது. ஆனால் சரமாரியாக குத்துகளை விட்டு எதிராளியை கலங்கடித்த அனுபவம் வாய்ந்த மேரிகோம் 9-1 என்ற கணக்கில் எளிதில் நிகாத் ஜரீனை சாய்த்து இந்திய அணியில் இடத்தை உறுதி செய்தார். இருப்பினும் கோபத்தில் காணப்பட்ட மேரிகோம், ஆட்டம் முடிந்ததும் அவருடன் கைகுலுக்கிக் கொள்ள மறுத்தார். மேலும் நிகாத் ஜரீன் கட்டிஅணைக்க வந்த போது, மேரிகோம் ஒதுங்கிக் கொண்டது, சலசலப்பை ஏற்படுத்தியது.

வெற்றிக்கு பிறகு 36 வயதான மேரிகோம் கூறுகையில், ‘நான் கொஞ்சம் கோபப்பட்டு விட்டேன். ஆனால் இப்போது எல்லாம் முடிந்து போய் விட்டது. நான் ஜரீனுக்கு சொல்வது என்னவென்றால் செயலில் காட்டி விட்டு பேச வேண்டும். இந்த சர்ச்சையை நான் தொடங்கவில்லை. தகுதி போட்டியில் பங்கேற்க முடியாது என்ற நான் ஒரு போதும் சொன்னது கிடையாது. இதில் எனது தவறு எதுவும் இல்லாத நிலையில், இந்த சர்ச்சையில் எனது பெயரை இழுத்திருக்ககூடாது.’ என்றார்.
மேலும் மேரிகோம், ‘நிகாத் ஜரீனுடன் நான் ஏன் கைகுலுக்க வேண்டும்? அவர் மற்றவர்கள் தனக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் அவர் மற்றவர்களை மதிக்க வேண்டும். இது போன்ற மனநிலை கொண்டவர்களை நான் விரும்புவதில்லை. உங்கள் கருத்துகளை களத்தில் நிரூபிக்க வேண்டுமே தவிர, வெளியில் அல்ல’ என்று காட்டமாக கூறினார்.
நிகாத் ஜரீன் கூறுகையில், ‘களத்தில் மேரிகோம் நடந்து கொண்ட விதம் எனக்கு வேதனை அளிக்கிறது. குத்துச்சண்டை வளையத்துக்குள் அநாகரிகமான வார்த்தைகளை பேசினார். நான் ஜூனியர் வீராங்கனை. போட்டி முடிந்ததும் பரஸ்பரமாக கட்டித்தழுவி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு அவர் முன்வரவில்லை. இதற்கு மேல் இந்த விஷயத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை’ என்றார்.
முன்னதாக 23 வயதான நிகாத் ஜரீனுக்கு ஆதரவாக வந்திருந்த தெலுங்கானா குத்துச்சண்டை சங்கத்தை சேர்ந்த சில பிரதிநிதிகள் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அவர்களை கட்டுப்படுத்திய இந்திய குத்துச்சண்டை சங்க தலைவர் அஜய் சிங், ‘இந்த மாதிரி எல்லாம் நடந்து கொண்டால் குத்துச்சண்டை எப்படி வளரும்’ என்றார்.
சாக்ஷி சவுத்ரி (57 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் மற்ற பிரிவுகளில் வெற்றி பெற்று ஒலிம்பிக் தகுதி போட்டிக்கு தேர்வானார்கள்.
முன்னாள் உலக சாம்பியனான எல்.சரிதாதேவி, 60 கிலோ பிரிவில் தேசிய சாம்பியன் சிம்ரன்ஜித் கவுரிடம் பணிந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story