ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23 ந்தேதி தொடங்கும்


ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23 ந்தேதி தொடங்கும்
x
தினத்தந்தி 30 March 2020 1:09 PM GMT (Updated: 30 March 2020 1:09 PM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


டோக்கியோ

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருப்பதுடன், சர்வதேச விளையாட்டு போட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் இருக்கின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு (2021) கோடை காலத்திற்கு முன்பாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆகஸ்ட் 8ந்தேதி வரை நடைபெறும்

இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறவிருந்த போட்டிகளுக்காக டிக்கெட் வாங்கியவர்கள் அதனை அடுத்த ஆண்டு உபயோகித்துக் கொள்ளலாம் என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

போட்டிகள் தள்ளிப் போவதால் டிக்கெட்களை உபயோகப்படுத்த விரும்பாதவர்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

Next Story
  • chat