பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா


பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Aug 2020 5:08 PM GMT (Updated: 24 Aug 2020 5:08 PM GMT)

பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜமைக்கா,

ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து உள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தனது 34-வது பிறந்தநாளை 
 கொண்டாடினார்.  அப்போது அவருடன் இங்கிலாந்து கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பல்வேறு விளையாட்டு பிரபலங்களும் பங்கேற்றனர். 

உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று  இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சமூகவலைதளத்தில் கொரோனா தொற்றால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story