டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: பிரேசில் வீரர்கள் தங்கி இருந்த ஒட்டல் ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு


டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: பிரேசில் வீரர்கள் தங்கி இருந்த ஒட்டல் ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 14 July 2021 12:32 PM GMT (Updated: 14 July 2021 12:32 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற பிரேசில் ஒலிம்பிக் அணியின் வீரர்கள் தங்கி இருந்த ஒட்டலில் இருந்த 7 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டோக்கியோ

 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி வரும் 23  ஆம் தேதி தொடங்க உள்ளது.  ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.   ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  போட்டித்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமம் பெரிய பாதுகாப்பு வசதிகளுடன் இன்று திறக்கப்பட்டிருக்கிறது.

205 நாடுகளைச் சேர்ந்த 11000 -விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் . இதனால் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியே செல்லும் சூழல் வந்தாலும் அவர்கள் தினமும் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒலிம்பிக் கிராமத்தில் குடியிருப்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்திருக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் ஒரு "வரலாற்று" நிகழ்வாக இருக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தலைவர் தாமஸ் பாக் கூறி உள்ளார்.

பல நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் பிரதிநிதிகள்  டோக்கியோ வரத்தொடங்கி விட்டனர். 

இந்த நிலையில் பிரேசில் ஒலிம்பிக் அணியின்  வீரர்கள் தங்கி இருந்த ஒட்டலில் இருந்த 7 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டோக்கியோவின் தென்மேற்கே உள்ள ஹமாமாட்சு நகரில் உள்ள ஓட்டலில் ஏழு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு  உள்ளதாக நகர அதிகாரி  யோஷினோபு சவாடா தெரிவித்துள்ளார்.ஓட்டலில் ஊழியர்கள் பணியைத் தொடங்குவதற்கு முன்  வழக்கமான சோதனையின் போது  கண்டுபிடிக்கப்பட்டதாக நகர அதிகாரி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 31 பேர் கொண்ட பிரேசிலிய ஒலிம்பிக் குழு ஓட்டலுக்குள் மற்றவர்களிடம் இருந்து தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.இதனால் அவர்கள் பாதிக்கப்படவில்லை.

தென் ஆப்பிரிக்க ரக்பி அணி வீரரக்ள் டோக்கியோ  வந்தபின்னர் தனிமைபடுத்தப்பட்டு  உள்ளனர், ஏனெனில் அவர்கள் விமானத்தில் ஒரு கொரோனா பாதித்தவருடன் தொடர்பு வைத்திருந்ததாக் நம்பப்படுகிறது.

விளையாட்டு அரங்குகளில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாவிட்டாலும், கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் காரணமாக ஜப்பானில்  ஒலிம்பிக் போட்டிக்கு  பொதுமக்கள் ஆதரவு குறைந்து உள்ளது.

Next Story