டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனைக்கு தங்கம்

டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை தங்க பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.
டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா அதிரடியாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதனால், அவர் இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு பதக்கம் பெற்று தருவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், இந்திய வீராங்கனை அவனி லெகாரா, மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த அவர் போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் பெற்று தந்து அவனி லெகாரா வரலாறு படைத்து உள்ளார்.
Related Tags :
Next Story