பாரா ஒலிம்பிக்: மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்


பாரா ஒலிம்பிக்: மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 31 Aug 2021 11:46 AM GMT (Updated: 2021-08-31T17:36:15+05:30)

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் பிரிவில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ, 

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் 8-வது நாளான இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் பிரிவில்  இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி  வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.  

உயரம் தாண்டுதலில் வெண்கலபதக்கத்தை  பீகாரை சேர்ந்த சரத்குமார் வென்றார்.உயரம் தாண்டுதல் பிரிவில்   அமெரிக்க வீரர் கிரீவ் சாம் தங்கம் வென்றார். 

Next Story