பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்தியவீரர் மனோஜ் சர்கார் தோல்வி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 Sep 2021 3:14 AM GMT (Updated: 4 Sep 2021 3:14 AM GMT)

பாராஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர்பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியவீரர் மனோஜ் சர்கார் தோல்வியடைந்தார்.

டோக்கியோ, 

டோக்கியோ பாராஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிக்களுக்காக இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றனர். அதில் பிரமோத் பகத், மனோஜ் சர்கார், சுஹேஷ் யேத்திராஜ், தருண் தில்லான், கிருஷ்ண நாகர் ஆகிய 5 பேரும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினர். 

மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத்-பலாக் கோலி ஜோடியும் அரையிறுதிக்கு  முன்னேறியுள்ளது. இதில் இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதில் இந்தியாவின் பிரமோத் பகத் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறி உள்ளார். 

இந்நிலையில் அதே எஸ்.எல் 3 பிரிவில் மற்றொரு இரண்டாவது அரையிறுதியில் மற்றொரு இந்திய வீரர் மனோஜ் சர்கார் இங்கிலாந்து வீரர் டேனியலை எதிர்த்து விளையாடினார். உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான டேனியல் பெத்தேலை எதிர்த்து மனோஜ் சர்கார் விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே டேனியல் பெத்தேல் ஆதிக்கம் செலுத்தினார். 17 நிமிடங்கள் நடைபெற்ற முதல் சுற்றை 21-8 என்ற கணக்கில் எளிதில் வென்றார். இதைத் தொடந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றையும் இங்கிலாந்து வீரர் பெத்தேல் 21-10 என்ற கணக்கில் வென்றார்.

இதன்மூலம் அரையிறுதியில் தோல்வி அடைந்த மனோஜ் சர்கார் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜப்பான் வீரர் பூஜிஹாராவை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் பிரிவில்  ஏற்கெனவே பிரமோத் பகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால் இந்தப் பிரிவில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 

Next Story