முதன் முறையாக விமானத்தில் பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா...


முதன் முறையாக விமானத்தில்  பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா...
x
தினத்தந்தி 11 Sep 2021 10:04 AM GMT (Updated: 2021-09-11T15:34:23+05:30)

முதன் முறையாக விமானத்தில் பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா தனது சின்ன ஆசை நிறைவேறியதாக கூறி உள்ளார்.

புதுடெல்லி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த நீரஜ் சோப்ரா, விமானத்தில் பெற்றோரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

முதன் முறையாக விமான பயணம் செல்லும் தன் பெற்றோருடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நீரஜ் சோப்ரா, பெற்றோரை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தனதுநீண்ட நாள்  சின்ன ஆசை நிறைவேறியதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story