சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி; இந்தியாவுக்கு தங்க பதக்கம்


சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி; இந்தியாவுக்கு தங்க பதக்கம்
x
தினத்தந்தி 4 Oct 2021 9:06 PM GMT (Updated: 4 Oct 2021 9:06 PM GMT)

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் 14 வயது நாமியா கபூர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.


லிமா,

சர்வதேச துப்பாக்கி சுடுதல் அமைப்பு நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்று வருகின்றன.

இதில், மகளிர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டி ஒன்றில் இந்தியாவின் 14 வயது வீராங்கனை நாமியா கபூர் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

கடந்த வாரம் தங்க பதக்கம் வென்ற மானு பாக்கர் நேற்று (திங்கட்கிழமை) நடந்த போட்டியில் வெண்கலம் வென்றார்.  இந்தியா 7 தங்கம், 6 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.
Next Story