பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீரர் லட்சயா சென் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் லட்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பாரீஸ்,
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் லட்சயா சென் (வயது 20) மற்றும் அயர்லாந்து நாட்டின் ஹாத் குயென் ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில், 21-10, 21-16 என்ற செட் கணக்கில் சென் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டி 45 நிமிடங்கள் நீடித்தது.
இதேபோன்று இந்தியாவின் சவுரப் வர்மா ஆடவர் ஒற்றையரில் பிரேசிலின் கோர் கோயெல்லோ என்பவரை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
Related Tags :
Next Story