பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்; சிந்து, சென் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்; சிந்து, சென் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 29 Oct 2021 8:26 AM GMT (Updated: 29 Oct 2021 8:26 AM GMT)

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் லட்சயா சென் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன.  இதில், நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் டென்மார்க் நாட்டின் ஜூலி ஜேக்கப்சென் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், 21-15, 21.18 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு சிந்து முன்னேறினார்.  இந்த போட்டி 35 நிமிடங்கள் நீடித்தது.

இதனை தொடர்ந்து, அடுத்த சுற்று போட்டியில் டென்மார்க் நாட்டின் லைன் கிறிஸ்டோபர்சென்னுடன் சிந்து இன்று விளையாடினார்.  இந்த போட்டியில், சிந்து, டேனிஸ் வீராங்கனையை 21-9, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

முதல் செட்டை கடுமையாக போராடி வெற்றி பெற்ற சிந்து, 2வது செட்டில் மிக எளிதில் வெற்றி பெற்று போட்டியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.  இதேபோன்று ஆடவர் ஒற்றையரில் இந்திய வீரர் லட்சயா சென், சிங்கப்பூரின் லே கியான் யூ ஆகியோர் விளையாடினர்.  இந்த போட்டியில் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் சென் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


Next Story