இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய இணை


இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய இணை
x
தினத்தந்தி 26 Nov 2021 5:30 PM GMT (Updated: 26 Nov 2021 5:30 PM GMT)

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் இந்திய இணை அரையிறுதி போட்டிக்கு இன்று முன்னேறியுள்ளது.


ஜகார்த்தா,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் இந்தோனேசிய நாட்டில் நடந்து வருகின்றன.  இதில் இன்று நடந்த இரட்டையர் போட்டி ஒன்றில்,  இந்தியாவின் சாத்விக்சாய் ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, மலேசியா நாட்டின் கோ ஜே பெய் மற்றும் நூர் இஜுதீன் இணையை எதிர்த்து விளையாடியது.

43 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 21-19, 21-19 என்ற செட் கணக்கில் போராடி இந்திய இணை வெற்றி பெற்றது.  அரையிறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளது.  அடுத்த போட்டியில் இந்தோனேசிய இணையை எதிர்த்து விளையாடுகிறது.


Next Story