நான் வென்றதிலேயே பெரிய உலக சுற்றுலா போட்டி இது; லக்சயா சென் பேட்டி


நான் வென்றதிலேயே பெரிய உலக சுற்றுலா போட்டி இது; லக்சயா சென் பேட்டி
x
தினத்தந்தி 16 Jan 2022 4:58 PM GMT (Updated: 16 Jan 2022 4:58 PM GMT)

நான் வென்றதிலேயே பெரிய உலக சுற்றுலா போட்டி இது என சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர் லக்சயா சென் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.புதுடெல்லி,


இந்திய ஓபன் 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய வீரரான 20 வயதுடைய லக்சயா சென் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த லோ கியான் யூவ் விளையாடினர்.  54 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் மிக திறமையான முறையில் விளையாடிய லக்சயா 24-22, 21-17 என்ற செட் கணக்கில் லோ கியானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதன்பின் அவர் அளித்த பேட்டியில், நான் விளையாடி வென்றதிலேயே பெரிய உலக சுற்றுலா போட்டி தொடர் இது என கூறியுள்ளார்.  வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

போட்டி முடிவடையும் தருணத்தில், எனக்கு லேசான நடுக்கம் ஏற்பட்டது.  ஏனெனில் இது எனக்கு மிக பெரிய போட்டி.  அதுவும் இறுதி போட்டியில் விளையாடுகிறேன்.  முடிவில் புள்ளிகளை கைப்பற்ற என்னால் முடிந்தது.  ஒரு வெற்றியை போராடி பெற்றதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சென் கூறியுள்ளார்.


Next Story