ஹோண்டாவின் புதிய ஜாஸ்

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது ஜாஸ். இந்த மாடலில் மேம்பட்ட ரகத்தை பல்வேறு சிறப்பம்சங்களோடு புதிதாக காட்சிப் படுத்தியுள்ளது.
பெண் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக இது விசேஷமான வண்ணங்களில் உருவாக்கப் பட்டுள்ளது. அதாவது நீல நிற மேற்கூரை, தங்க நிற வெளிப்பகுதி என ஜொலிப்போடு இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஹோண்டா ஜாஸ் எலிகன்ட் என்ற பெயரில் இது லாஸ்வேகாஸில் நடைபெற்ற சர்வதேச மின்னணு தொழில்நுட்பக் கண்காட்சியில் (சி.இ.எஸ்.) அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
தானாக அணைந்து எரியும் முகப்பு விளக்கு, ரியர் வியூ கேமரா, புளூடூத் வசதியில் செயல்படுவது உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 90 ஹெச்.பி. திறனுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 100 ஹெச்.பி. திறனுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆகிய மாடல்களில் இவை வந்துள்ளன. பெட்ரோல் மாடலில் மானுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் மாடல் கிடைக்கிறது. டீசல் மாடலில் வெறும் மானுவல் கியர் டிரான்ஸ்மிஷன் மாடல் மட்டுமே அறிமுக மாகியுள்ளது.
இம்மாதம் 11 - ம் தேதி முதல் 13- ம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறும் ஆட்டோ சலோன் கண்காட்சியில் இக்கார் இடம்பெற உள்ளது.
ஹோண்டா நிறுவனம் அடுத்த தலைமுறை ஜாஸ் மாடல் காரை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யவும் திட்ட மிட்டுள்ளது.
Related Tags :
Next Story






