மார்ச் 15 வரையிலான இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 14.46% வளர்ச்சி - பாரத ரிசர்வ் வங்கி தகவல்


மார்ச் 15 வரையிலான இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 14.46% வளர்ச்சி - பாரத ரிசர்வ் வங்கி தகவல்
x
தினத்தந்தி 29 March 2019 4:04 PM IST (Updated: 29 March 2019 4:04 PM IST)
t-max-icont-min-icon

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

மார்ச் 15-ந் தேதி வரையிலான இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 14.46 சதவீதமும், திரட்டிய டெபாசிட் 10.03 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

புள்ளிவிவரங்கள்

பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

மார்ச் 15 நிலவரப்படி வங்கிகள் வழங்கிய கடன் ஏறக்குறைய ரூ.95.53 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 14.46 சதவீத வளர்ச்சியாகும். அப்போது அது ரூ.83.46 லட்சம் கோடியாக இருந்தது. மார்ச் 1 வரையிலான முந்தைய இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 14.55 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.95.29 லட்சம் கோடியாக இருந்தது.

கணக்கீட்டுக் காலத்தில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் 10.03 சதவீதம் உயர்ந்து ரூ.122.26 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே நாளில் அது ரூ.111.11 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய இரண்டு வாரங்களில் திரட்டப்பட்ட டெபாசிட் 9.8 சதவீதம் அதிகரித்து ரூ.122.30 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வங்கிகள் வழங்கிய உணவு அல்லா கடன் 13.10 சதவீதம் அதிகரித்து இருந்தது. விவசாய கடன் 7.6 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. சேவைத் துறை கடன் 23.90 சதவீதம் உயர்ந்து இருந்தது. தொழில்துறை கடன் 6 மடங்கு உயர்ந்து 5.2 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. அதே சமயம் தனிநபர் கடன் 16.9 சதவீதம் குறைந்து இருந்தது.

சென்ற ஆண்டின் இதே மாதத்தில் வங்கிகள் வழங்கிய உணவு அல்லா கடன் 9.5 சதவீதம் உயர்ந்து இருந்தது. விவசாய கடன் 9.4 சதவீதம் உயர்ந்து இருந்தது. சேவைத் துறை கடன் 13.2 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. தொழில்துறை கடன் 1.1 சதவீதம் அதிகரித்து இருந்தது. தனிநபர் கடன் 20 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.

பாரத ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்றில் இந்த புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன.

உணவுக்கடன்

நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட தனிநபர்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் உணவு அல்லா கடனாகும். நெல், கோதுமை கொள்முதலுக்காக இந்திய உணவுக் கழகத்திற்கு வங்கிகள் வழங்குவது உணவுக்கடன் என்று அழைக்கப்படுகிறது.
1 More update

Next Story