பங்கு வெளியீட்டில் களம் இறங்கும் உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் டிசம்பர் 2-ந் தேதி தொடங்குகிறது


பங்கு வெளியீட்டில் களம் இறங்கும் உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் டிசம்பர் 2-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 29 Nov 2019 10:52 AM GMT (Updated: 29 Nov 2019 10:52 AM GMT)

உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இந்த வெளியீடு டிசம்பர் 2-ந் தேதி தொடங்குகிறது.

மும்பை

உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இந்த வெளியீடு டிசம்பர் 2-ந் தேதி தொடங்குகிறது.

எதிர்கால வளர்ச்சி

சிறிய வங்கித் துறையைச் சேர்ந்த உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் தனது எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டும் வகையில் பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இவ்வெளியீடு வருகிற 2-ந் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி 4-ந் தேதி (புதன்கிழமை) நிறைவடைகிறது.

உஜ்ஜிவான் பேங்க் வெளியீட்டில் ரூ.750 கோடி மதிப்பிற்கு பங்குகள் வெளியிடப்பட உள்ளது. இதில் ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.36- 37-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த பங்குதாரர்களுக்கு ரூ.75 கோடி வரையிலான மதிப்பிற்கு பங்குகள் ஒதுக்கப்பட உள்ளது. பங்குகள் வேண்டி விண்ணப்பிக் கும் முதலீட்டாளர்கள் குறைந்த பட்சம் 400 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு 400 என்ற மடங்கில்தான் விண்ணப்பிக்க முடியும்.

உஜ்ஜிவான் பேங்க் பங்கு வெளியீட்டை கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், ஐ.ஐ.எப்.எல். செக்யூரிட்டீஸ், ஜே.எம். பைனான்சியல் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. வெளியீட்டுக்குப் பின் அதன் புதிய பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

ஏ.யூ. ஸ்மால் பைனான்ஸ்

சிறிய வங்கித் துறையில் தற்போது பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனம் ஏ.யூ. ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகும். முதலில் ஏ.யூ. பைனான்சியர்ஸ் என்ற பெயரில் வங்கியல்லா நிதி நிறுவனமாக செயல்பட்டு வந்த இதற்கு பாரத ரிசர்வ் வங்கி, கடந்த 2015-ஆம் ஆண்டில் சிறிய வங்கியாக செயல்பட உரிமம் வழங்கியது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story