சிறப்புக் கட்டுரைகள்

ஐ.ஆர்.சி.டி.சி. லாபம் ரூ.206 கோடி + "||" + IRCTC Profit of Rs.206 crore

ஐ.ஆர்.சி.டி.சி. லாபம் ரூ.206 கோடி

ஐ.ஆர்.சி.டி.சி. லாபம் ரூ.206 கோடி
மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனப் பங்கு ரூ.1,585-க்கு கைமாறியது.
ரெயில்வே துறையைச் சேர்ந்த ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நிறுவனம் ரூ.206 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.74 கோடியாக இருந்தது. ஆக, லாபம் ஏறக்குறைய 3 மடங்கு உயர்ந்து இருக்கிறது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 65 சதவீதம் அதிகரித்து ரூ.716 கோடியாக உள்ளது.

இந்நிறுவனம், தனது பங்குதாரர்களுக்காக, ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.10-ஐ இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனப் பங்கு ரூ.1,585-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.1,609.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,514.90-க்கும் சென்றது. இறுதியில் இப்பங்கு ரூ.1,579.95-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 11.35 சதவீதம் உயர்வாகும்.