வானவில் : பெபிளின் புளூடூத் ஸ்பீக்கர் ‘எட்ஜ்’


வானவில் : பெபிளின் புளூடூத் ஸ்பீக்கர் ‘எட்ஜ்’
x
தினத்தந்தி 4 March 2020 4:21 PM IST (Updated: 4 March 2020 4:21 PM IST)
t-max-icont-min-icon

பெபிள் நிறுவனம் புதிதாக புளூடூத் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.

‘எட்ஜ்’ என்ற பெயரில் வந்துள்ள புளூடூத் ஸ்பீக்கர் விலை சுமார் ரூ.1,699. அழகிய நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் இது வெளிவந்துள்ளது. அனைத்து முன்னணி விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களிலும் இது விற்பனைக்குக் கிடைக்கிறது.

இதில் 10 வாட் ஹெச்.டி. சவுண்ட் டிரைவ் உள்ளது. பண்பலை வானொலி வசதியும் உள்ளது. குரல்வழி கட்டுப்பாடு மூலம் செயல்படும் தன்மை வாய்ந்தது.

இதில் புளூடூத் இணைப்பு, மைக்ரோ எஸ்.டி. கார்டு போடும் வசதி, யு.எஸ்.பி. அல்லது ஏ.யு.எக்ஸ். கேபிள் வசதி உள்ளது. இதில் 1,200 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளதால் இது தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படும் தன்மை வாய்ந்தது. மொபைல் போனை இதன் மேல்பகுதியில் வைக்கும் இட வசதியும் உள்ளது.

இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான காட்சிகளை இடையூறின்றி பார்க்க முடியும். எடை குறைவானது, எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. நீர், தூசி புகா தன்மை கொண்டது.
1 More update

Next Story