வானவில் : யுபோன் போர்ட்டபிள் ஸ்பீக்கர்


வானவில் : யுபோன் போர்ட்டபிள் ஸ்பீக்கர்
x
தினத்தந்தி 11 March 2020 9:55 AM GMT (Updated: 2020-03-11T15:25:48+05:30)

மின்னணு கருவிகள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் யுபோன் மின்னணு பிராண்ட் தற்போது எளிதில் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் புதிய ரக ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.

யுபோன் ‘எஸ்.பி 6850’ என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த ஸ்பீக்கரின் விலை சுமார் ரூ.1,799 ஆகும். என்டர்டெயின்மென்ட் பாக்ஸ் என்ற பெயரில் இது வெளி வந்துள்ளது. இது தொடர்ந்து நான்கு மணி நேரம் செயல்படக் கூடியது. 

எந்த ஒரு மின்னணு சாதனத்துடனும் இதை இணைக்க முடியும். இதில் உள்ளடாக வயர்லெஸ் ஸ்டீரியோ இசையை வெளிப்படுத்தும் நுட்பம் உள்ளது. இதில் பண்பலை (எப்.எம்) வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு ரசிக்க முடியும். நீலம், கிரே, சிவப்பு, கருப்பு உள்ளிட்ட நிறங்களில் இது வெளிவந்துள்ளது.

Next Story