கருப்பு திராட்சையின் 10 ஆச்சரியமான நன்மைகள்


கருப்பு திராட்சையின் 10 ஆச்சரியமான நன்மைகள்
x

கருப்பு திராட்சை பழங்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. பொதுவாக ஒயின், ஜூஸ், ஜாம் மற்றும் ஜெல்லி தயாரிக்க கருப்பு திராட்சை பயன்படுத்தப்படுகிறது. சாலட்டுகளிலும் சேர்க்கப்படுகிறது. கருப்பு திராட்சையை அப்படியே சாப்பிடுவதும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.

இதில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்பவர்களுக்கு சிறந்த தேர்வாகவும் அமையும். கருப்பு திராட்சையின் மேலும் 10 ஆரோக்கியமான நன்மைகள் குறித்து பார்ப்போம்.

1. சரும நலன்: கருப்பு திராட்சையில் வைட்டமின்கள் சி, ஈ ஆகியவை உள்ளன. இவை வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. சூரிய கதிர்கள் உமிழும் வெப்பம் மற்றும் சுற்றுப்புற மாசுபாடுகளில் இருந்து சருமத்தை காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

2. உடல் எடை: கருப்பு திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இவை பசி உணர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும். நிறைவாக சாப்பிட்ட உணர்வை நீண்ட நேரம் தக்கவைக்கவும் செய்யும்.

3. இதய ஆரோக்கியம்: திராட்சையில் ரெஸ்வெராட்ரோல், குர்செடின் போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை தமனிகளில் அடைப்பு உருவாவதை தடுப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கின்றன.

4. நோய் எதிர்ப்பு சக்தி: கருப்பு திராட்சையில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகை செய்யும்.

5. புற்றுநோய்: கருப்பு திராட்டையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல்,குவெர்செடின் போன்றவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. ப்ரீ ரேடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, செல்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. இதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை தடுக்கின்றன.

6. கொழுப்பு: கருப்பு திராட்சையில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் சேர்மங்கள் உள்ளன. இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இதன் மூலம் தவிர்க்கலாம்.

7. செரிமானம்: மற்ற பழங்களை விட கருப்பு திராட்சையில் நார்ச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுப்பதற்கு அவை உதவுகின்றன.

8. வீக்கம்: கருப்பு திராட்சையில் வீக்கத்தைக் குறைக்க உதவும் கலவைகள் உள்ளன. நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க இவை உதவும்.

9. செல்கள்: கருப்பு திராட்சையில் பாலிபினால்கள், அந்தோசயின்கள் போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. அவை செல்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

10. மூளை: கருப்பு திராட்சையில் உள்ள ஆன்டிஆக்சிடெண்டுகள் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும். முதுமைக் காலத்தில் அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கவும் வழிவகை செய்யும்.


Next Story