செயற்கை ரத்தம் தயார்..!


செயற்கை ரத்தம் தயார்..!
x

செயற்கை ரத்தத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு, அதில் வெற்றியும் கிடைத்து இருக்கிறது.

விபத்துகள், இயற்கை சீற்றங்களின்போது காயமடைபவர்களுக்கு ரத்தம் தேவைப்படும். அதேபோல அறுவை சிகிச்சைகளின்போதும் நோயாளிகளுக்கு ரத்தம் அவசியமாகிறது.

ரத்த தானம் மூலம் உலக அளவில் பெறப்படும் ரத்தம், போதுமானதாக இருப்பது இல்லை. குறிப்பாக அரிய வகை ரத்தம் கிடைப்பதில் தொடர்ந்து சிரமங்கள் உள்ளன.

எனவே, செயற்கை ரத்தத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு, அதில் வெற்றியும் கிடைத்து இருக்கிறது.

இந்தநிலையில், லண்டனில் மிகச் சிறிய அளவு செயற்கை ரத்தம் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு, அது எவ்வாறு செயல்படுகிறது என்று பரிசோதிக்கப்பட்டது. ''ஆய்வகங்களில் ஸ்டெம் செல்கள் வளர்க்கப்பட்டு, ரத்த சிவப்பணுக்களாக மாற்றப்படுகின்றன. 5 லட்சம் ஸ்டெம் செல்கள் எனும் தொடக்க தொகுப்பு, 50 பில்லியன் சிவப்பணுக்களாக கிடைக்கும். இது 15 பில்லியன் ரத்த சிவப்பணுக்களாக வடிகட்டி குறைக்கப்படும். தொடர்ந்து செயற்கை ரத்தத்தை தயாரித்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே இலக்கு'' என்கிறார் பேராசிரியர் ஆஷ்லே டாய்.


செயற்கை ரத்தம் செலுத்தியும் ஆய்வுகள் துல்லியமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஒருமுறை வழக்கமான ரத்தமும், இன்னொரு முறையில் ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட ரத்தமும் செலுத்தப்படுகிறது. வழக்கமான ரத்தத்தை விட, ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட ரத்தம் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக தானமாகப் பெறப்பட்ட ரத்தம் இளம் மற்றும் பழைய ரத்த சிவப்பணுக்களைக் கொண்ட கலவையாக இருக்கும். ஆனால், ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்படும் ரத்த சிவப்பணுக்கள் முழுவதும் புத்தம் புதிதாக இருக்கும் எனத் தெரிகிறது.


Next Story