பல்சர் 125 கார்பன் பைபர் எடிஷன்


பல்சர் 125 கார்பன் பைபர் எடிஷன்
x

பஜாஜ் நிறுவனத் தயாரிப்புகளில் பல்சர் மாடலில் 125 சி.சி. பிரிவில் முதல் முறையாக கார்பன் பைபர் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.89,254. இந்த மாடல் தனித் தனி இருக்கைகள் அல்லது ஒரே இருக்கை என இரண்டு விதமான இருக்கை வசதிகள் கொண்டதாக வந்துள்ளது. நீலம் மற்றும் சிவப்பு நிறங்களுடன் இரண்டு வண்ணங்களின் அடிப்படை நிறமாக கருப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. முகப்பு விளக்கு, பெட்ரோல் டேங்க் உள்ளிட்ட பகுதிகளில் கிராபிக் டிசைன் பார்ப்பதற்கு மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. கருப்பு அலாய் சக்கரங்கள், நியான் முகப்பு விளக்குகள் இதற்கு கூடுதல் தோற்றப் பொலிவை அளிக்கிறது. பகலில் ஒளிரும் (டி.ஆர்.எல்.) விளக்கும் உள்ளது. இது 124.4 சி.சி. திறன் மற்றும் ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டதாகும்.

இது 11.64 பி.ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். சுழற்சியி லும், 10.80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். 5 கியர்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க்கும், பின்புறம் வாயு நிரப்பப்பட்ட இரண்டு ஸ்பிரிங்குகளும் சொகுசான சவாரியை உறுதி செய்கின்றன.

முன்புறம் டிஸ்க் பிரேக்கும், பின்புறம் டிரம் பிரேக்கும் கொண்டதாக இது வந்துள்ளது. டியூப்லெஸ் டயரைக் கொண்டது. இதன் எடை 142 கிலோவாகும்.


Next Story