பஜாஜ் பல்சர் என் 250, எப் 250


பஜாஜ் பல்சர் என் 250, எப் 250
x

பஜாஜ் நிறுவனம் தனது பிரபல தயாரிப்பான பல்சரில் இரண்டு வேரியன்ட்களை (என் 250 மற்றும் எப் 250) அறிமுகம் செய்துள்ளது.

கருப்பு வண்ணத்தில் மேட் பினிஷில் இவை ஜொலிக்கின்றன. இதன் முகப்பு விளக்கில் புரொஜெக்டர் விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பானது ஓநாயின் கண்களைப் போல உள்ளது. அலாய் சக்கரம், எக்ஸாஸ்ட், என்ஜின் என அனைத்து பகுதிகளும் கருப்பு நிறமாக வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,49,978.

இது 249.07 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. ஆயில் கூல்டு எஸ்.ஓ.ஹெச்.சி. மோட்டார் 24.5 பி.எஸ். திறனையும், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்துவதாக 5 கியர்களுடன் வந்துள்ளது.

ஸ்லிப்பர் கிளட்ச் வசதி, யு.எஸ்.பி. சார்ஜர், பகுதியளவு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். முன்சக்கரத்துக்கு 300 மி.மீ. அளவிலான டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்துக்கு 230 மி.மீ. அளவிலான டிஸ்க் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story