பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 4 எடிஷன்

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது நிறுவனத்தின் எம் பிரிவின் 50-ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இப்பிரிவில் தயாராகும் மாடல்களில் சிறப்பு எடிஷனை வெளியிடுகிறது.
அந்த வரிசையில் தற்போது எக்ஸ் 4 எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு வேரியன்ட்கள் (எக்ஸ் 4 320 ஐ எம் ஸ்போர்ட் – விலை சுமார் ரூ.72,90,000 மற்றும் எக்ஸ் 430 டி எம் ஸ்போர்ட் –விலை சுமார் ரூ.74,90,000) அறிமுகமாகி யுள்ளன. வழக்கம்போல கிட்னி வடிவிலான கிரில், பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரத்யேக லோகோ, வழக்கமான பி.எம்.டபிள்யூ. லோகோ ஆகியவற்றுடன் இது வந்துள்ளது.
எல்.இ.டி. முகப்பு விளக்கு மேட்ரிக்ஸ் செயல்பாடு கொண்டதாக வந்துள்ளது. பம்பர்கள் கருமையான மெட்டாலிக் வண்ணத்தில் உள்ளன. பின்புற விளக்குகளும் எல்.இ.டி.யால் ஆனவை. 3 அடுக்கு கிளைமேட் கண்ட்ரோல் வசதி, சரக்குகளை வைக்க 525 லிட்டர் இட வசதி மற்றும் இருக்கைகளை மடக்குவதன் மூலம் 1,430 லிட்டர் வரை இட வசதி கிடைக்கும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது.
பி.எம்.டபிள்யூ. டுவின் டர்போ தொழில்நுட்பம் கொண்டது. 3 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் என்ஜினைக் கொண்டது. இது 265 ஹெச்.பி. திறனையும், 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப் படுத்தும். நான்கு சக்கர சுழற்சி கொண்டது. ஸ்டார்ட் செய்து 5.8 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்ட முடியும்.
இதி்ல் 2 லிட்டர் 4 சிலிண்டர் மாடலும் வந்துள்ளது. இது 252 ஹெச்.பி. திறன் மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் விசையை வெளிப்படுத்தும்.
100 கி.மீ. வேகத்தை 6.6 விநாடிகளில் எட்டும். 8 ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டது. பார்க்கிங் அசிஸ்டென்ட், ரியர் வியூ கேமரா வசதி, ரிவர்ஸ் அசிஸ்டென்ட் வசதி உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டது.
தானியங்கி ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, பிரேக் போடுவதிலிருந்து கிடைக்கும் சக்தியை மின்சாரமாக மாற்றும் வசதி, எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங், பாதுகாப்புக்கு 6 ஏர்பேக், ஏ.பி.எஸ்., டி.எஸ்.சி., டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதி களைக் கொண்டது. இது தவிர சி.பி.சி., பார்க்கிங் பிரேக், பக்கவாட்டு பாதிப்புகளை தவிர்க்கும் நுட்பம், விபத்து தடுப்பு சென்சார், குழந்தைகள் பயணிக்க ஐ-சோபிக்ஸ் வசதி ஆகியன கொண்டது.






