சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்


சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்
x

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in

கேள்வி: சமந்தாவை 'பான் இந்தியா ' ஸ்டாராக ஆக்கியது எந்த படம்? (உலக நாயகி, தேவிபட்டினம், ராமநாதபுரம்)

பதில்: 'புஷ்பா ' தான். ரசிகர்களை 'ஆ' வென வாயை பிளக்க வைத்த, 'ஓ சொல்றியா மாமா ...' பாடலில் அவரது வளைவு நெளிவான ஆட்டத்தை ரசிக்காதவர்கள் தான் யாரோ...!

***

கேள்வி: நயன்தாராவுக்கு சேலை அழகா , மாடர்ன் டிரஸ் அழகா ? (கே.ஆர்.ரவீந்திரன் , சென்னை)


பதில்: 'மாடர்ன் டிரஸ் தான் பிட்' என சர்டிபிகேட் கொடுக்கிறாராம், கணவர் விக்னேஷ் சிவன்!

***

கேள்வி: சமந்தா , திரிஷா, தமன்னா , வாணிபோஜன் ஆகிய நால்வரில் அழகியாரோ? (கே.எம்.ஸ்வீட்முருகன் , கரடிகொல்லப்பட்டி)

பதில்: ஒவ்வொருவர் கண்ணுக்கும் ஒவ்வொருவர் அழகு!

***

கேள்வி: துப்பறியும் படங்களிலேயே வியப்பை தந்த பழைய படம் எதுவோ ? (ஆர்.முருகன் , பழனி)

பதில்: சிவாஜி-சரோஜா தேவி நடித்த 'புதிய பறவை '. சஸ்பென்ஸ்-திரில்லர் வகையில் ரசிகர்களை திகைக்க வைத்த படம் அது!

***

கேள்வி: குருவியாரே... நல்ல டபுள் மீனிங் வசனம் எப்படி இருக்க வேண்டும்? (எம்.அறிவழகன் , கும்பகோணம்)

பதில்: அதில் நல்ல அர்த்தம் பெரியவர்களுக்கு புரியவேண்டும். கெட்ட அர்த்தம் டீன் ஏஜ் வயதினருக்கு யூகங்களை ஏற்படுத்த வேண்டும்!

***

கேள்வி: ஒவ்வொரு படத்துக்கு பிறகும் நடிகைகளுக்கு கிடைப்பது என்ன? (மலர்மன்னன், திருவண்ணாமலை )

பதில்: புதிய அனுபவம் தான்!

***

கேள்வி: குதிரை சவாரியில் கைதேர்ந்த நடிகை யார்? (வி.ஆசைத் தம்பி, மதுரை)


பதில்: ரகுல் பிரீத் சிங் தான் . அவர் கடிவாளத்தை பிடித்தால் அடங்காத குதிரையும் அடங்கிவிடுமாம்!!

***

கேள்வி: பிறமொழிகளில் வெளியாகும் ரஜினிகாந்த் படங்களில் அவருக்கு 'டப்பிங்' பேசுபவர்கள் யார்? (எச்.டி.ருத்ரமூர்த்தி,திருச்சி)

பதில்: தெலுங்கில் பாடகர் மனோவும், இந்தியில் மயூர்வியாசும் அதிகமாக 'டப்பிங்' பேசுவார்களாம். இதர மொழிகளில் அந்தந்த சூழலுக்கேற்ப 'டப்பிங்' கலைஞர்கள் மாறுவார்கள்!

***

கேள்வி: நித்யாமேனன் மிருதங்கம் வாசிப்பது போல என் கனவில் வருகிறாரே.. (ஜேம்ஸ்சன் , தூத்துக்குடி)



பதில்: குப்புற படுத்து தூங்கும்போது இந்த கனவு வந்ததோ என்னவோ..!

***

கேள்வி: ஜி.வி.பிரகாஷ் இன்னும் எத்தனை படங்களில் தான் பள்ளி மாணவராகவே நடிப்பார்? (காளியப்பன், திருமடம்)


பதில்: கல்லூரி மாணவர் கதைகளத்துடன் எந்த இயக்குனரும், இன்னும் அவரை அணுகவில்லையாம்!

***

கேள்வி: காந்த குரலோன் டி.எம்.சவுந்தரராஜன் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்? (திருமுருகன் , திண்டுக்க ல்)

பதில்: 11 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். ஆயிரத்துக்கும் மேலான பக்தி பாடல்களுக்கு சுயமாக இசையமைத்துப் பாடியுள்ளார்!

***

கேள்வி: பொது இடத்தில் மிருணாள் தாகூர், ரசிகர் மீது கோபப்பட்டாராமே? (கார்த்திகா , திருநெல்வேலி)



பதில்: இருக்காதா பின்னே ... பின்னாடி இருந்து ஓடோடி வந்த ரசிகர் அவரை பார்த்து, 'சீக்கிரம் கம்பேக் கொடுங்கன்னு' அழுத்தி கேட்டுக்கிட்டே வந்திருக்கிறார். 'பேக்'கை தான் கிண்டல் செய்வதாக நினைத்து நடிகை கோபப்பட்டு விட்டாராம்!

***

கேள்வி: 'சிகப்பு ரோஜாக்கள்' படம் பற்றி தெரியாத தகவல் கூறுங்களேன் ? (ஆர்.காவ்யா, அரக்கோணம்)

பதில்: இந்தியாவிலேயே 2 நாட்களில், ரீ-ரிக்கார்டிங் இசை முழுவதுமாக அமைக்கப்பட்ட சிறப்புக்குரிய படம் அது!

***

கேள்வி: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் படம் எது? (வேல்விழியாள், மானாமதுரை )

பதில்: 2018-ம் ஆண்டு வெளியான 'கனா'!

***

கேள்வி: கேரள 'லேடி சூப்பர் ஸ்டார்' மஞ்சு வாரியரின் சிறப்பம்சம் என்னவோ ? (அரவிந்த் குமார், பிள்ளையார்பட்டி)

பதில்: துணிச்சலான நடிப்பு தான். அவரது பூர்வீகம் கன்னியாகுமரி என்பது கூடுதல் சிறப்பு!


Next Story